Home
Overview
Technical Help

Select Unit > Unit 6: காலையில் என்ன சாப்பிட்டாய்? > Lesson 1:   Written   No script   Translation   Lessons:   1   2   3   4   5   6   Exercises: 1   2   3   4   5   6   Reading: 1   2   Glossary   Conversations  Test

    

Boy: மல்லிகா! மல்லி! என்ன செஞ்சுக்கிடிருக்கெ?

Girl: பாத்தா தெரியல்லெ. துணியெதான் காயப்போட்டுக்கிட்டிருக்கேன்.

A:சரி. காலெலெ என்ன சாப்பிட்டெ?

B:கோதுமெக் கஞ்சிதான் குடிச்சேன்.

A:நானும் கோதுமெ கஞ்சிதான் குடிச்சேன். என்ன தொட்டுக்கிட்டெ?

B:பச்செ மிளகாயெ தொட்டுக்கிட்டேன்!

A:நானும் பச்செ மிளகாய்தான் தொட்டுக்கிட்டேன். மல்லிகா, நீ ரொம்ப அழகா இருக்கெ!

B:அட! சீ! போ! இதுக்குத்தானா நானும் கோதுமெக் கஞ்சி குடிச்சேன், நானும் பச்செ மிளகாய் தொட்டுக்கிட்டேண்ணு கதெ விட்டெ?

A:ஐயோ! அப்படி சொல்லாதே! நான் நிஜமாத்தான் சொல்றேன். என்னெ நம்பு.

B:நான் எதெ நம்பணும்? நீ கோதுமெ கஞ்சி குடிச்சதெயா?

A:இல்லெ! இல்லெ! நீ அழகா இருக்கெண்ணு சொன்னேனே. அதெத்தான்.

B:இதோ பாரு. சும்மா நான் அழகா இருக்கேன் கிழகா இருக்கேண்ணுஅசடு வழிஞ்சுகிட்டு இருக்காதே! போய் உறுப்படியா ஏதாவது வேலெயெப் பாரு! போ!

A: அப்போ, இதெயெல்லாம் நான் என்ன செய்ய?

B:! இதெல்லாம் எனக்கா? குடு! குடு! குடு!

    Grammar Notes:

    Using the auxilliary verb கொள்

    கொள் is an auxilliary verb that also occurs on its own as a main verb. கொள் as a main verb has the meaning 'hold, contain, have', though its use as a main verb is rare. Also like விடு and the other aspectuals, கொள் has a number of different meanings that vary depending on the context. It comes after another verb that is put in the AVP and can take tense and PNG. In its non-finite form it can be used to express simultaneity.
      NOTE: In written Tamil auxilliary கொள் takes the following forms: pres கொள்கிற்-PNG, past கொண்ட்-PNG, future கொள்வ்-PNG, infinitive கொள்ள. In spoken Tamil, this reduces to: pres க்ற்-PNG, past கிட்ட்-PNG, future க்குவ்-PNG, and infinitive க்க.

    Benefactive meaning:

    Using கொள் with a verb in the AVP indicates that the subject is benefited by the action stated by the verb.

    1. பிள்ளையார் முருகனுக்குத் தெரியாமல் பழத்தை வாங்கிக்கொண்டார்.
    Lord Vinayaga got the fruit for himself without the knowledge of Lord Muruga.

    2. நல்ல சட்டையை நான் எடுத்துக்கொண்டேன். சாதாரண சட்டையை தம்பியிடம் கொடுத்துவிட்டேன்.
    I took (for myself) the nice shirt and gave the ordinary shirt to my younger brother.

    3. மழையில் நனையாமல் இருக்கக் குடையை நன்றாகப் பிடித்துக்கொள்ளுங்கள்
    In order to not to get wet in the rain, hold the umbrellaa very tight.

    Reflexive meaning of கொள்:

    Adding the suffix கொள் makes the object and subject of the AVP one and the same. Usually a reflexive pronoun டான் ' self' is included in such constructions.

    4. குருவும் மாணவனும் தங்களுக்கே சாபம் விட்டுக்கொண்டார்கள். The teacher and the student cursed themselves. (By cursing each other they got a curse for themselves eventually)

    5. மந்திரவாதி தன்னையே கண்ணாடியில் பார்த்துக்கொள்வார். The magician sees himself in the mirror

    6. வானம் எப்பொழுதும் தன்னையே புகழ்ந்துகொள்கிறது. Sky always praises itself.

    Use of கொள் for future use/ego benefaction etc.:

    Adding the suffix கொள் gives a slightly different meaning from 'benefaction', as we saw above. Rather, it can also be used to express that the action of the AVP is for 'future use' or 'for one's own sake' etc.

    7. செருப்பைப்/ சட்டையைப் போட்டுக்கொள்... (put on your chepals/ shirt etc.,)

    8. ஊருக்குப் போவதற்கு முன்னால் எல்லாவற்றையும் எடுட்டு வைத்துக்கொள். You have to get everything packed before you leave for another town.

    9. இந்தப் புத்தகத்தை எனக்காகக் கொஞ்ச நேரம் வைத்துக்கொள்ளுங்கள். Please keep this pen for a while for me.

    Use of கொள் to express the process of becoming (inchoative/punctual)

    கொள் can also be used to indicate that some event/state is coming into being. This meaning occurs primarily with verbs that describe states, such as the defective (dative subject) verbs such as தெரி, புரி. Note how the subject's case changes are it is the auxiliary கொள் which takes the PNG agreement suffix.

    எனக்கு தமிழ் தெரியும். 'I know Tamil.'
    நான் தமிழ் தெரிந்துகொண்டேன். 'I came to know Tamil.'

    எனக்கு நீங்கள் சொன்னது புரிந்தது. 'I understood (it was understandable) what you said.'
    நான் நீங்கள் சொன்னதைப் புரிந்துகொண்டேன். 'I understood what you said.'

    Expressing simultaneity

    கொள் in the non-finite AVP form, கொண்டு (sp. கிட்டு) can be used to express simultaneity of actions. The structure is AVP1-கொண்டு...Main Verb.

    அவர் பேசிக்கொண்டு கார் ஓட்டினார். (written)
    அவர் பேசிக்கிட்டு கார் ஓட்டுனாரு. (spoken).
    He was speaking while driving a car.

    அவர்கள் நிறைய புத்தகம் எடுத்துக்கொண்டு மதுரைக்கு போவார்கள்.
    She will go to Madurai taking lots of books.

    Homework exercise

    Translate the following sentences with கொள் appropriately.

    1. The elephant went into to the pond to drink water.

    2. The Guru and the teacher cursed themselves.

    3. The magician saw himself in a mirror.

    4. I took lots of money before leaving for India.

    5. I wore a good shirt.

    Practice drill for கொள்

    1. நான் இந்தியாவுக்குப் போனால்

        நிறைய பணம் எடுத்துக்கொள்வேன்

        நிறைய மருந்து வாங்கு

        நல்ல சட்டை போடு

        ரொம்ப gifts purchase பண்ணு

    2. நான் இன்றைக்கு காலையில் பள்ளிக்கூடத்துக்கு வரும் முன்னால்

        ரொம்ப சாப்பிட்டுக்கொண்டேன்

        வீட்டுப்பாடம் எல்லாவற்றையும் எழுது

        கண்ணாடியை துடைத்து போடு

        எல்லா புஸ்தகத்தையும் எடு

    3. நான் வீட்டுக்கு திரும்பி வரும் வரை நீங்கள்

        வீட்டை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்

        பாங்கில் பணத்தை withdraw செய்

        ராத்திரியில் கதவை நன்றாகச் சாட்டு

        Krogersலெ பால் வாங்கு

    4. நாளைக்கு எனக்கு interview என்றால்

        நான் நன்றாகப் படித்துக்கொள்ளவேண்டும்

        நல்ல கோட் போடு

        எல்லா certificatesஐயும் எடு

        சாமியை கும்பிடு

    Cultural Notes:

    Hesitation forms

    Hesitation and making a guess in Tamil are usually accompanied by the forms உம்..., இல்லெ..., வந்து..., அப்பறம்... etc. These words can occur at any place in a sentence for any number of times. The possible contexts where these forms can be used include: a) When trying to admit a mistake, b)When saying something without knowing much details about it, c)When trying to hide something from somebody, d) when trying to break a surprise, e) when attempting to express something out of fear, and so on.

    வந்து. வந்து. நான் நேத்து வந்து, உம் அப்பறம்...நான் பள்ளிக்கூடத்துக்குப் போகாம சினிமாவுக்கு போனேன் 'I went to a movie theater yesterday, without attending to the school'.

    A: உம்ம்ம்... நான் வந்து உன்னெ வந்து... 'I, you know, I...'

    B: என்ன? வந்து போயிண்ணு ஒரே வழிசலா வழியுறெ? சொல்றதெ டக்குண்ணு சொல்லு! 'What? What do you mean by 'coming' and 'going'? What are you making a big fuss about? Tell me right away!

    A: இல்லெ! வந்து! நான் வந்து! உன்னெ... வந்து! காதலிக்கிறேன். 'No! I am just! I love you!'

© South Asia Language Resource Center (SALRC)